Aran Sei

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் – பாஜக மாநிலத் தலைவர் பேச்சு

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா மாநில தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

சிறுபான்பையினரின் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் சாதி ஏழைகள், பட்டியல் சாதிகள், பழங்குடியினர்களுக்கு சலுகைகள் வழங்குவோம் என்று பண்டி சஞ்சய் குமார்  கூறியுள்ளார்.

“லவ் ஜிஹாத் என்ற பெயரில் என் சகோதரிகள் ஏமாற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருப்போமா. ஏழைகளை மதம் மாறச் செய்தால் இந்து சமுதாயம் பொறுத்துக் கொள்ளாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா: அரசியல் தெரியவில்லை என்றால் வீட்டிற்குச் சென்று சமையல் செய்யுங்கள் – தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியாவை விமர்சித்த பாஜக தலைவர்

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கரீம்நகரில் இந்து ஏக்தா யாத்திரையில் உரையாற்றிய அவர், “லவ் ஜிஹாத் என்று சொல்பவர்கள் லத்தியால் அடி பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். மத மாற்றம் செய்பவர்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகச் செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், நிஜாம் ஆட்சியின் போது இந்து சமுதாயத்திற்கு எதிராக ரசாக்கர்களால் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் குறித்து போலி மதச்சார்பின்மைவாதிகளின் கண்களைத் திறக்க விரைவில் ‘ரசாக்கர் ஃபைல்ஸ்’ வெளிவரும் என்று கூறியுள்ளார்.

‘பாஜகவால் வஞ்சிக்கப்படும் ஓபிசி மக்கள்’ – சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த சரத் பவார் வலியுறுத்தல்

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருப்பதாக  கூறப்படுவதைக் குறிப்பிட்டு, தெலுங்கானாவில் உள்ள மசூதிகளை தோண்டி அங்கே சிவலிங்கம் இருந்தால் மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க முடியுமா என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனின் கட்சியின் தலைவர் ஓவைசியிடம் பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா தலைவரும் மக்களவை உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: Theindianexpress

தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் – பாஜக மாநிலத் தலைவர் பேச்சு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்