விவசாயிகள் போராட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளார், அமெரிக்கா துணை ஜனாநிதிபதியின் உறவினரும், அமெரிக்க வழக்கறிஞருமான மீனா ஹாரீஸ்.
டெல்லி எல்லையில் 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாகப் பிரபல பாப் இசை கலைஞர் ரிஹான்னா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா ஆகியோர் ஆதரவு தெரிவித்தை தொடர்ந்து மீனா ஹாரீஸும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இது தொடர்பான பதிவொன்ற அவர் பிப்ரவரி 3 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
உரிமைகளுக்காக போராடுவதும், போராட்டங்களை ஆதரிப்பதும் தான் ஜனநாயகம் – இயக்குனர் வெற்றிமாறன்
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை எனவே இதில் வெளிநாட்டினர் தலையிட வேண்டாம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ரிஹான்னா, கிரெட்டா, மீனா ஹாரீஸ் ஆகியோருக்கு எதிராக ஐக்கிய இந்து முன்னணியினர் (United Hindu Front), டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய புகைப்படங்களை, ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாட்டு பிரிவினைவாதிகள் கருத்துத் தெரிவிப்பது பொருத்துக்கொள்ள முடியாது என்று பதாகைகள் ஏந்தி இருந்தனர்.
அந்த ட்விட்டர் பதிவை மறு ட்வீட் செயத மீனா ஹாரீஸ், ”இந்திய விவசாயிகளின் மனித உரிமைகளுக்கு ஆதரவாக நான் பேசினேன், அதற்கு வந்த பதிலைப் பாருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
I spoke out in support of human rights for Indian farmers, and look at the response. https://t.co/5xzB6pxxA8
— Meena Harris (@meenaharris) February 4, 2021
மேலும் மற்றொரு ட்விட்டில், ”என்னை மிரட்ட முடியாது. என்னை அமைதியாக்க முடியாது” எனப் பதிவிட்டிருந்தார்.
I won’t be intimidated, and I won’t be silenced.
— Meena Harris (@meenaharris) February 4, 2021
வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நடக்கும் போராட்டத்திற்கு குரல் கொடுப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அரசுக்கு ஆதரவானவர்கள் கூறிவந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, “கனடா நாட்டைச் சேர்ந்த அக்ஷய் குமார் பேசும்பொழுது, ரிஹன்னா ஏன் பேசக் கூடாது?. வெளிநாட்டினர் என்றால் அனைத்து நாட்டினரும் தானே?” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.