விவசாயச் சட்டங்கள் தொடர்பான குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் விரைவில் வெளியிடாவிட்டால், உரிய நேரத்தில் அதை நானே வெளியிடுவேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் நரேந்திர மோடி, விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் ஆகியோருக்கு விவசாயச் சட்டங்கள் தொடர்பான விவசாயச் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் ஒருவரான அனில் கன்வத் கடிதம் எழுதியுள்ளார்.
“இந்தக் குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துக் ஏறத்தாழ ஒர் ஆண்டு ஆகிறது. இந்த அறிக்கையை வெளியிடக் கோரி நான் 2 முறை கடிதங்கள் அனுப்பிய போதிலும் உச்சநீதிமன்றம் இதுவரை அறிக்கையை வெளியிடவில்லை என்று அந்த கடித்ததில் அனில் கன்வத் எழுதியுள்ளார்.
‘குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு’ – வேல்முருகன் கண்டனம்
வேளாண் சட்டங்களின் கொள்கைகளை வடிவமைத்தவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த அறிக்கையை நாம் சரியான நேரத்தில் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் நானே இதை வெளியிட வேண்டிய வரும். விவசாயச் சட்டங்கள் தொடர்பான குழுவின் அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட பெரும்பாலான அறிக்கைகள் இப்போது ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளன என்று அனில் கன்வத் கூறியுள்ளார்.
குவிந்து கிடக்கும் சொத்தும் இந்தியாவின் பிரச்சினையும் – ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுவது என்ன?
வேளாண் சட்டங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இது தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் உட்பட முழு அளவிலான சீர்திருத்தங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அனில் கன்வத் கோரிக்கை வைத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.