நான் உயிருடன் இருக்கும் வரை விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்களை அனுமதிக்க மாட்டேன் என்று தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருவது மாநிலத்தின் நிதி நிலையைச் சீர்குலைக்கும் சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலுங்கானா உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர் கே. சந்திரசேகர் ராவ் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த உரையில் அவர் குறிப்பிடும்போது, 75 ஆண்டுகளில் நம் நாட்டில் எந்த மாநிலமும் செய்ய முடியாத வெற்றியைத் தெலுங்கானா மாநிலம் பதிவு செய்துள்ளது. மூன்றாண்டுகள் என்ற குறுகிய காலத்தில் மாபெரும் திட்டங்களை முடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளோம். உலகின் மிகப்பெரிய லிப்ட் பாசனத் திட்டத்தை (lift irrigation) செய்து முடித்துள்ளோம், இது சீனா போன்ற ஒரு நாட்டில் மட்டுமே சாத்தியமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
தலித் பந்து திட்டம்குறித்து பேசிய அவர், தலித் சமூகத்தின் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட சமூக சீர்திருத்த இயக்கம் என்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தலித் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் அரசு நிதியுதவி வழங்குகிறது என்று கே. சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
மாத சம்பளம் ரூ.9,000 என்பது ஓர் உழைப்பு சுரண்டல் – உச்சநீதிமன்றம்
“முற்போக்கு மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவது துரதிர்ஷ்டவசமானது. தெலுங்கானா உருவான ஆரம்ப நாட்களில் இருந்தே இந்த பாகுபாடு தொடங்கியது.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தைப் பிரிப்பதற்கு கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தாமதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“புதிதாக உருவான மாநிலத்திற்கு கூடுதல் நிதி வழங்குமாறு நான் தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன். அவை அனைத்தும் வீணாகிவிட்டன. கொரோனா வைரஸால் நம் நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிபற்றி அனைவரும் அறிந்ததே. அந்த இக்கட்டான நேரங்களிலும், கூடுதல் நிதியை மாநிலத்திற்கு ஒன்றிய அரசு வழங்கவில்லை. மேலும், மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியையும் குறைத்துள்ளது” என்று கே.சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் உள்ள விவசாயிகளை தூண்டிவிட வேண்டாம் என்று ஒன்றிய அரசுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். ஒன்றிய அரசு தனது கார்ப்பரேட் ஆதரவு மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், “வலுவான மையம்-பலவீனமான மாநிலங்கள்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாநிலங்களை நிதி ரீதியாக நலிவடையச் செய்ய ஒன்றிய அரசு சதி செய்கிறது. ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தான் உயிருடன் இருக்கும் வரை இந்த விவசாயிகளுக்கு எதிரான மின் சீர்திருத்தங்களை தனது அரசு ஏற்காது என்றும் தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
Source: NDTV
ரூ 9602 கோடி GST நிலுவை தொகை வருவதற்கு Stalin காரணம் Ramasubramanian
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.