Aran Sei

‘தமிழ் வழியில் படித்ததால் தான் என்னால் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது’ – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

பெங்களூருவில் தமிழ் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, தமிழ் வழியில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தக திருவிழா நேற்று (டிசம்பர் 25) தொடங்கியது. பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவை, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் ராம்பிரசாத் மனோகர், பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்த்குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா? – பொள்ளாச்சி மா உமாபதி

இதையடுத்து தமிழ் புத்தக திருவிழா குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் தனாபிவிருத்தி கடன் கூட்டுறவு வங்கியின் நிறுவனர் சுந்தரவேலு, ஆர்.ஆர்.இன்டஸ்டரீஸ் தலைவர் துரை, தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி, கர்நாடக தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ராம்பிரசாத் மனோகர், “தமிழ் புத்தக திருவிழாவை தலைமை ஏற்று நடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்த விழா குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விழா ஒரு புத்தக திருவிழா மட்டும் இல்லை. நமது உறவுகளை புதுப்பித்து கொள்ளும் விழா.

‘நீட் தேர்வால் தமிழ் வழி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு செல்வது குறைந்துள்ளது’ – சமத்துவ டாக்டர்கள் சங்கம்

கர்நாடகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் நான் தமிழ் பேசுகிறேன் என்று சொல்லி கொள்ளவே தயங்குகின்றனர். இந்த விழாவை தலைமை ஏற்று நடத்த சிலர் தயங்கினர். ஆனால் நான் தலைமை ஏற்கிறேன் என்று கூறினேன். தமிழ் என்பது எனது முகம், தமிழ் என்பது எனது அடையாளம். தமிழ் எனது முகவரி. எனது முகவரியை மறைத்து வாழ வேண்டிய தவற நான் செய்யவில்லை. நான் தைரியமாக, சந்தோஷமாக, ஆர்வமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

சிலர் என்னிடம் தமிழ் மொழியில் படித்து எப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனீர்கள் என்று கேட்டது உண்டு. அவர்களிடம் நான் தமிழ் மொழியில் படித்ததால் தான் நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனேன் என்று பெருமையுடன் கூறி இருக்கிறேன். தாய் மொழி உணர்வு பூர்வமானது என்று பேசியுள்ளார்.

சென்னை: அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 16%, ஆங்கிலவழியில் பயிலும் மாணவர்கள் 84% – ஆர்.டி.ஐ, தகவல்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, “புதிய முயற்சியாக, புதிய நம்பிக்கையாக இன்று ஆரம்பித்து உள்ள முதல் தமிழ் புத்தக திருவிழா உண்மையில் நம்பிக்கை தருகிறது. தமிழ் எனது அடையாளம், தமிழ் எனது முகம் என்று ராம்பிரசாத் மனோகர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். எனது முகவரி தமிழகம் என்றாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பெங்களூருவில் தான் உள்ளேன். நான் எழுதிய 7 புத்தகங்களும் பெங்களூருவில் வைத்து தான் எழுதப்பட்டது. நமது தாய் மொழியை மறக்க கூடாது. வேர்களாக இருக்கும் மொழியை மறக்க கூடாது. அந்த மொழி நமது தாய். அந்த தாய் மொழி தான் உயரத்தை தொட உதவி உள்ளது.

நான் முழுக்க படித்தது எனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தான். நான் படித்தது தமிழ்வழியில் தான். தமிழில் படித்து விண்வெளி துறையில் சாதித்தீர்களா என்று என்னிடம் நிறைய பேர் கேட்டு உள்ளனர். தமிழில் படித்ததால் தான் நான் சாதித்தேன் என்று கூறினார்.

Source : dailythanthi

அ.மலைக்கு டைம் சரியில்ல |அமர்பிரசாத் கிண்டுற களி |கம்பி எண்ணப்போகும் அண்ணாமலை |

‘தமிழ் வழியில் படித்ததால் தான் என்னால் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது’ – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்