Aran Sei

‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்’ – மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

ட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கும் மணிப்பூர் மக்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற விரும்புகின்றனர் என்று மணிப்பூர் பாஜக தலைவரும், முதலமைச்சருமான பிரேன் சிங் நேற்று (ஜனவரி 3) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் படிப்படியாக நீக்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரேன் சிங் கூறியுள்ளார்.

மணிப்பூரில் வருகின்ற பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த டிசம்பரில் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினரால் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்கியது. ஆனாலும் நாகாலாந்தில் வரும் ஜூன் வரையிலும் , மணிப்பூரில் டிசம்பர் வரையிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.

“நான் ஒரு மணிப்பூரியாகவும், மணிப்பூரின் முதலமைச்சராகவும்”,  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

 

Source : scroll

 

‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்’ – மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்