கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டத்தை நான் அமல்படுத்தவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டை யாராவது நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
கேரள உயர்கல்வித்துறையில் ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் இடதுசாரிக் கட்சிகள் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், “நான் ஆர்எஸ்எஸ் இன் செயல்திட்டத்தைச் செயல்படுத்துகிறேன் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் கூறி வருகிறீர்கள். எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் நியமித்த ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிடவும். உடனே ராஜினாமா செய்கிறேன்.
கேரள நிதி அமைச்சர் என்னை பார்த்து, உத்தரபிரதேசத்தில் பிறந்த ஒருவர் கேரளாவின் கல்வி முறையை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். இந்தியாவின் ஒற்றுமைக்கு அவர் சவால் விடுகிறார்.
அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது முதலமைச்சரின் விருப்பம், எனக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆனால் என் கடமையை நிறைவேற்ற நான் இவ்வளவும் செய்ய வேண்டும் என்பதால் குறைந்தபட்சம் இதை கேரள மக்களுக்குத் தெரியப்படுத்தினேன் என்று ஆரிப் முகமது கான் கூறினார்.
Source : NDTV
நன்றி மறந்தாரா நளினி ? Nalini Release | Rajiv Gandhi Case | Perarivaalan | Vaiko | Deva’s Update 58
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.