Aran Sei

“நான் Flower இல்ல Fire”:குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி

குஜராத் வட்கம் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தவர் கடைசி கட்டத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தில் இளம் அரசியல் தலைவராக, தலித் போராளியாக, இடதுசாரி அரசியல்வாதியாக உருவெடுத்து வருகிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடி வந்தவர்தான் ஜிக்னேஷ் மேவானி.

நான் Flower இல்ல Fire: பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில கோட்சே பக்தர்களே எனது கைதுக்கு காரணம் என ஜிக்னேஷ் மேவானி கருத்து

உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பெரிய ‘உனா பேரணியை’ 2016ல் நடத்தி காட்டினார். இதில் 20,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அங்கு தலித் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ள இளம் அரசியல் தலைவராக உருவெடுத்து உள்ளார்.

கடந்த 2017 சட்டசபை தேர்தலில் குஜராத்தில் வட்கம் தொகுதியில் ஜிக்னேஷ் மேவானி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். 2017ல் நடந்த இந்த தேர்தலில் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் இவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை. சுயேட்சையாக நின்றும் பாஜகவிற்கு எதிராக தனி ஆளாக வென்றார். பல்வேறு தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள், போராட்ட இயக்கங்கள் இவருக்கு ஆதரவு கொடுத்தன. இதனால் அந்த தேர்தலில் ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்றார்.

‘என் கைது பாஜக அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது’ – விடுதலையான குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

இவர் சட்டமன்ற உறுப்பினர் ஆன நிலையில் பல்வேறு விஷயங்களில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். பாஜகவை குஜராத்தில் மிக கடுமையாக எதிர்த்து வந்தார். ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருந்த ஜிக்னேஷ் மேவானி கடந்த வருடம் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். காங்கிரசில் முக்கிய தலைவராக உருவாகி இருக்கும் இவர் 40 வயது மட்டுமே நிரம்பியவர். சட்டம் படித்த இவர் 2008ம் ஆண்டிலிருந்து தலித் மக்களின் உரிமைக்காக போராட்டங்கள் நடந்தி வருகிறார். டெல்லியில் ரோஹித் வெமுலா மரணம் அடைந்த போது இவர் நிறைய போராட்டங்கள் நடத்தினார். அந்த போராட்டத்திலிருந்தே அரசியல் வெளிச்சம் இவர் மீது பட ஆரம்பித்தது.

இந்நிலையில் குஜராத் வட்கம் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி இன்று வெற்றி பெற்றார். தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தவர் கடைசி கட்டத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜிக்னேஷ் மேவானி 65177 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் மணிபாய் 61684 பெற்றார். இதையடுத்து 3493 வாக்குகள் வித்தியாசத்தில் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார்.

Source : NDTV

KT ராகவனின் பூஜையறை ரகசியம் | எல்லாம் கேசவ விநாயகம் ட்ரெயினிங் | Aransei Roast | KT Raghavan | BJP

“நான் Flower இல்ல Fire”:குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்