Aran Sei

காஷ்மீர்: வழக்குகளின்றி மூன்று ஆண்டுகளாக வீட்டு காவலில் இருக்கும் ஹுரியத் தலைவர் மிர்வைஸ் – விடுதலை செய்யக் கோரி மத மற்றும் அரசியல் அமைப்புகள் கோரிக்கை

காஷ்மீரில் முறையான வழக்குகளின்றி மூன்று ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருக்கும் ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக்கை விடுதலை செய்யக் கோரி மத மற்றும் அரசியல் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 4, 2019 ஆம் தேதி மிர்வைஸ் கைது செய்யப்பட்டார்.

மிர்வைஸின் வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தெரியாத விருந்தினர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹுரியத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், “மிர்வைஸை அவரது வீட்டில் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளனர். இது அவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயல்” என்று கூறியுள்ளார்.

கிலானியின் உடல் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு – புகாரை மறுத்து காணொளி வெளியிட்ட காவல்துறை

“அவருக்கு அனைத்து தொலைத் தொடர்புகளும் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள், நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடனான அனைத்து தொடர்புளும் தடை செய்யப்பட்டுள்ளன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அமைதியான பேச்சுவார்த்தை மூலம் அண்டை நாடுகளுடன் நீடித்து வரும் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தியதற்காக மிர்வைஸ் தண்டிக்கப்பட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“மிர்வைஸ் உள்ளிட்ட காஷ்மீரின் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்கவும், அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையை தொடங்கவும் இந்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஓமிக்ரான் பரவலால் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு வேண்டுகோள்

மிர்வைஸ் விடுவிக்க வேண்டும் என்று மக்கள் மாநாட்டுக் கட்சியின் சஜாத் லோன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளின் மூலம் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜம்மு காஷ்மிரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை அவர் வலியுறுத்தி வருகிறார்.

“அவர்கள் அரசியல் ரீதியாக வேறுபட்டிருக்கலாம், ஆனால் அவர் ஒரு மதத் தலைவராக மக்களை ஊக்குவிக்கிறார், அவர் மிதவாத சக்திகளை வழிநடத்தினார். மிதமான மற்றும் இஸ்லாத்தின் உண்மையான சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வார்த்தைகளில் மிர்வைஸ் நம்பிக்கை கொண்டுள்ளார். அவருக்கு மத கடமைகள் உள்ளன. அவர் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது அவருக்கு எதிரான குற்றமாகும், மேலும் அவர் ஒரு மத அளவில் ஊக்கமளிக்கும் அனைவருக்கும் எதிரான குற்றமாகும்,” என்று சஜாத் லோன் கூறியுள்ளார்.

Source: The Hindu

Kallakurichi Sakthi School Owner Statement VS New CCTV Footage | Kallakurichi Issue new video | Deva

 

காஷ்மீர்: வழக்குகளின்றி மூன்று ஆண்டுகளாக வீட்டு காவலில் இருக்கும் ஹுரியத் தலைவர் மிர்வைஸ் – விடுதலை செய்யக் கோரி மத மற்றும் அரசியல் அமைப்புகள் கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்