Aran Sei

காஷ்மீரில் பெண் ஆசிரியை கொலை – இடமாறுதல் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்

Credit: The Hindu

காஷ்மீரில் ஒரு பெண் ஆசிரியையை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ள நிலையில், பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து மாறுதல் கேட்டு அரசு ஊழியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமரின் சிறப்பு மறுவாழ்வுத் தொகுப்பின் கீழ் பணியமர்த்தப்பட்ட புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் ஜம்முவில் இருந்து பட்டியல் சமூக ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

“பிரதமரின் தொகுப்பின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் குறித்து நிர்வாகம் கவலை கொள்கிறது. ஆனால், பட்டியல் சமூக ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் குறித்து கவலை கொள்வதில்லை. நான் இந்த பள்ளத்தாக்கில் 2007 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டேன். அதில் இருந்து பட்டியல் சமூக ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு எந்த இடமாறுதல் கொள்கையும் வரையறுக்கப்படவில்லை. நாங்கள் இந்தப் பள்ளத்தாக்கில் கொல்லப்படுவதற்காக விடப்பட்டுள்ளோம்” என்று குல்காம் பகுதியில் பணியமர்த்தப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்: துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் மரணம்; ஒரே மாதத்தில் ஏழுபேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து மாறுதல் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  குல்காம் மற்றும் ஶ்ரீநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான பண்டிட்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது துணை நிலை ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

“சில நாட்களுக்கு முன்பு நாங்கள் துணைநிலை ஆளூநரை சந்தித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து எங்களை இடம் மாற்றக் கோரினோம். காஷ்மீரில் பயங்கரவாதத்தை துடைத்தழிக்க இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என்று காவல் கண்காணிப்பாளரும் பதிவு செய்துள்ளார். அதற்குள் நிர்வாகம் எங்களை மாற்ற வேண்டும். நாங்கள் இறந்துவிடக் கூடாது” என்று ஸ்ரீநகரின் ஷிவ்போராவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பண்டிட் ஒருவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் நடைபெறும் வன்முறைக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தான் காரணம் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

பள்ளத்தாக்கில் இருந்து இடமாற்றம் செய்ய நிர்வாகம் தவறினால், அதனை எதிர்த்துப் பெரிய அளவில்  புலம்பெயர இருப்பதாக பண்டிட்கள் தெரிவித்துள்ளனர்.

“பள்ளத்தாக்கை  விட்டு வெளியேறினால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று நிர்வாகம் எங்களை மிரட்டுகிறது. அவர்கள் எங்களை பள்ளத்தாக்கில் உள்ள அலுவலகங்களில்  சேரும்படி வற்புறுத்துகிறார்கள். நாங்கள் மிகவும் மலிவாக பலியாகி விடக் கூடாது” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு பண்டிட் கூறியுள்ளார்.

“ஒரே தீர்வு, இடமாற்றம்” என்ற முழக்கத்தைக் கோரி காஷ்மீரின் சாலைகளில் பண்டிட்கள் அணிவகுப்பாக சென்றுள்ளனர்.

Source: The Hindu 

இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview | BJP | Modi Speech Chennai

காஷ்மீரில் பெண் ஆசிரியை கொலை – இடமாறுதல் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்