மனிதநேயமும், உண்மையும் மிக உயர்ந்தவை, அவற்றை சாதி, பாலினம், மதத்தின் அடிப்படையில் பிரிக்க முடியாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
கௌடியா மடம் மற்றும் மிஷனின் நிறுவனர் ஸ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்தின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சமய மரபுகள், பண்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒட்டுமொத்த மனிதக்குலத்தையும் ஒரே குடும்பமாகக் கருதி அனைவரின் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நமது இந்தியக் கலாச்சாரத்தில் ஏழைகளுக்குச் சேவை செய்வதே முதன்மையானது. மனிதநேயமும் உண்மையும் உயர்ந்தவை மற்றும் பிரிக்க முடியாதவை. சமுதாய நலனே நமது இறுதி இலக்கு” என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Source : indianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.