டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனையான வந்தனா கட்டாரியாவின் குடும்பத்தின் மீது நடந்த சாதிவெறி சம்பவங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென மனிதஉரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநில ஹரித்வார் மாவட்டத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு இந்த உத்தரவை உத்தரகண்ட் மனிதஉரிமைகள் ஆணையம் அனுப்பியுள்ளது.
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கின் அரையிறுதி ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியுற்றது.
இந்திய மகளிர் ஹாக்கி அணியில் “பெரும்பான்மையான தலித்துகள்” இடம்பெற்றிருந்தாலேயே அணி தோல்வியுற்றதாகக் கூறி, ஆதிக்க சாதியைச் சார்ந்த இருவர் வந்தனா கட்டாரியா வீடு முன்பு வெடி வெடித்து , நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, சாதி ரீதியாக இழிவுபடுத்தி வந்தனாவின் குடும்பத்தை திட்டியும் உள்ளனர்.
இதுதொடர்பாக, சுமித் சவுகான் மற்றும் விஜய் பால் ஆகிய இரண்டு பேர் மீது உத்தரகண்ட் காவல்துறை இந்திய தண்டனை சட்டப்பிரிவு 504 (அமைதியை கெடுக்கும் நோக்குடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தது) மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Source: New Indian Express
தொடர்புடைய பதிவுகள்:
நாங்கள் தேசத்திற்காக விளையாடுகிறோம்; எனவே நாங்கள் அனைவரும் ஒன்று தான் – வந்தனா கட்டாரியா
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.