Aran Sei

50% இடஒதுக்கீட்டை தாண்டி அக்னி வீரர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும் – ஹரியானா முதல்வருக்கு காங்கிரஸ் கேள்வி

யுதப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த அக்னிவீரர்களுக்கு ஹரியானா அரசு ‘உத்தரவாத’ வேலைவாய்ப்பை வழங்கும் என்று மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்திருந்தார். இதற்குக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா எதிர்வினையாற்றியுள்ளார். ”50% இடஒதுக்கீட்டைத் தாண்டி இன்னொரு பிரிவை எப்படி உருவாக்குவீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு படைக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தில் இணையும் அக்னிவீரர்களுக்கு பணி காலம் முடிந்த பிறகு ஹரியானா மாநிலத்தில் அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். நாட்டிலேயே ஹரியானாதான் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு

“ஹரியானா அரசுப் பணியில் சேர விரும்பும் அக்னிவீரர்களுக்கு உத்தரவாதமான வேலை வழங்கப்படும். யாரும் வேலை இல்லாமல் போகமாட்டார்கள். இந்த இளைஞர்கள் குரூப் சி சேவைகளில் சேர்க்கப்படுவார்கள். எழுத்தர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் அல்லது காவல்துறை போன்ற பணிகளில் நிரப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, உத்தரவாத வேலைகளை எவ்வாறு அரசாங்கம் உறுதி செய்யும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். “50% இடஒதுக்கீட்டைத் தாண்டி இன்னொரு பிரிவை எப்படி உருவாக்குவீர்கள்? அக்னிபாத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த கூடுதல் வேலைவாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து யாராவது நீதிமன்றத்தில் வழக்கடினால் இளைஞர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களால் எங்கும் செல்ல முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்னிபத் திட்டத்தின் வழியாக பாஜக தனது சொந்த ‘ஆயுதப் படையை’ உருவாக்குகிறது: மம்தா பானர்ஜி விமர்சனம்

ஒன்றிய அரசுக்கு அசாமில் உள்ள ஓர் அரசியல் கட்சி  எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த அக்னிவீரர்கள் பணி காலம் முடிந்து வேலை கிடைக்காவிட்டால் விரக்தியில் தீவிரவாதத்திற்கு இழுக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

அக்னிபத் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

ஓய்வூதியம் இல்லாத ஒழுங்கற்ற சேவைக்கு அக்னிபாத் திட்டம் படைகளை வழங்குவதாகவும், அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் அசோம் ஜாதியா பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.

Source: Thenewindianexpress

Army Man Interview on Agnipath | பாஜக செய்வது தேசபக்தியா தேசத்துரோகமா? | Dr Poovannan

50% இடஒதுக்கீட்டை தாண்டி அக்னி வீரர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும் – ஹரியானா முதல்வருக்கு காங்கிரஸ் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்