Aran Sei

பாபர் மசூதி இடிப்பு – ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது’ – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்

credits : the indian express

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் தேசத்தின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என்றும் பல்வேறு மதநம்பிக்கைகளை கொண்ட மக்கள் இதை ஆதரிக்கரிரார்கள் என்றும் மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டுமானத்திற்காக அதிகளவிலான நன்கொடை அளித்தவர்களை கெளரவப்படுத்தும் நிகழ்ச்சி டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராம ஜென்ம பூமி இயக்கம் நாட்டின் ”சுயமரியாதைக்காக” தொடங்கப்பட்ட இயக்கம் என கூறியுள்ளார்.

”ராமஜென்ம பூமியில் கட்டப்பட இருக்கும் கோயில் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும். ராமர் நாட்டை ஒன்றிணைத்துள்ளார், நாட்டினுடைய ஒற்றுமையின் சின்னமாகவும் அவர் விளங்குகிறார்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் : ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய பாஜக எம்.பி கவுதம் கம்பீர்

”நமது நாட்டு மக்களை இயக்கும் சக்தியாக ராமர் கோயில் இருப்பதை உணர்ந்ததால் தான் இந்தியா வந்த பாபர், ராமர் கோயிலை தேர்வு செய்து அழித்தார். அயோத்தியில் பழமையான ராமர் கோயிலை இடித்து உருவாக்கப்பட்ட கட்டிடம் மசூதி இல்லை” (அங்கு தொழுகைகள் நடத்தப்படவில்லை) எனவும் அவர் கூறியுள்ளார்.

’அயோத்தி ராமர் கோயிலுக்கு இதுவரை 100 கோடி நன்கொடை’ – வரிசை கட்டும் பாலிவுட் நடிகர்கள்

ராமர் கோயில் கட்டுவதற்கு வழிவகுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, நாடு முழுவதும் மகிழ்ச்சியின் அலைக்கு வழிவகுத்தது என்று கூறிய அவர், ராமர் கோயிலுக்கு மக்கள் நன்கொடைகளை அளிப்பது என்பது குஜராத்தில் உள்ள சர்தார் படேலின் சிலைக்கு ஆறு லட்சம் கிராமங்களிலுள்ள விவசாயிகள் இரும்புத் துண்டுகளை வழங்கியதைப் போன்றது என்று ஜவடேகர் கூறியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை வாங்கும் பேரணிகள் – கலவரத்தை ஏற்படுத்தும் சங்பரிவார்

1992 ஆம் ஆண்டு அவர் அயோத்தியில் இருந்ததாகவும், அந்த வரலாற்றுப்பிழை சரி செய்யப்படுவதை நேரில் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். “அதற்கு (பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு) முந்தைய நாள் நாங்கள் அங்கு தான் உறங்கினோம். பாபர் மசூதியின் மூன்று குவிமாடத்தையும் (Dome) நாங்கள் பார்த்தோம். அதற்கு அடுத்த நாள் அந்த வரலாற்றுப் பிழை நீக்க்ப்பட்டது” என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கட்டுவதற்கு அரசு ஊழியர்களிடம் நிதி – அரசு சார்பாக வங்கிக் கணக்கு தொடங்கிய உ.பி., பொதுப்பணித்துறை

”ராமர் இனி ஒரு மதத்தால் உரிமை கோரப்படமாட்டார் என்பதும், முழு நாட்டிற்கும் பெருமையின் அடையாளமாக மாறியிருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் கூட விரும்புகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், அது இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அவர் கூறியுள்ளார். அங்குள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலைக் காண இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு – ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது’ – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்