Aran Sei

விடுதலைக்காக 141 நாள் உண்ணாவிரதம் – பணிந்த இஸ்ரேல் அரசு. பாலஸ்தீனர் விடுதலை

ஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதியான ஹிஷாம் அபு ஹவாஷ் தனது காவலை நீட்டிக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என 141 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளார். அடுத்த மாதம் அவரது காவலைப் புதுப்பிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் வரை இஸ்ரேலிய சிறைகளில் குறைந்தது 4,550 பாலஸ்தீனிய கைதிகள் இருந்துள்ளனர். அவர்களில் குறைந்தது 500 பேர் விசாரணையின்றி கைது செய்யப்பட்டு நிர்வாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய கைதிகள் ஆதரவு சங்கம் கூறியுள்ளது.

2013 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஹிஷாம் அபு ஹவாஷ் இன் போராட்டம் தான் அதிக காலம் நீடித்த போராட்டமாகும். 5 பிள்ளைகளின் தந்தையான ஹிஷாம் அபு ஹவாஷ், 2020 அக்டோபரில் இருந்து “நிர்வாகக் காவலில்” வைக்கப்பட்டுள்ளார்.

கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனித உரிமைகளுக்கான மருத்துவர்களின் அறிக்கை எச்சரித்தது.

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீனியர்கள் காலவரையின்றி எவ்வித குற்றச்சாட்டுகளோ, முறையான விசாரணையோ இல்லாமல் நிர்வாக காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைக்காக 141 நாள் உண்ணாவிரதம் – பணிந்த இஸ்ரேல் அரசு. பாலஸ்தீனர் விடுதலை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்