Aran Sei

முஹம்மது நபி தொடர்பான கருத்து தெரிவித்த விவகாரம் – நுபுர் சர்மாவை தூக்கிலிட கோரிய எம்.ஐ.எம் எம்.பி கருத்தால் சர்ச்சை

Credit: The Indian Express

முஹம்மது நபி தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவித்திருந்த நுபுர் சர்மாவை அவுரங்காபாத் உள்ள சதுக்கத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் ஜலீல் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

கியான்வாபி மசூதி விவகாரம் தொடர்பான டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முஹம்மது நபிகுறித்து அவதாறான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிரான நாடு முழுவதும் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களில் ஏற்படும் வன்முறையில் பலர் படுகாயமடைந்து வருகின்றனர்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

நுபுர் சர்மாவின் கருத்து சர்வதேச அளவிலும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரை அழைத்து கண்டனங்லை பதிவு செய்தனர். இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று கத்தார் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நபி தொடர்பான அவதூறு கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை அவுரங்காபாத்தின் சதுக்கத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: பாஜக செய்த பாவத்திற்கு மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் – மம்தா பானர்ஜி கேள்வி

அவுரங்காபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய இம்தியாஸ் ஜலீல், “நுபுர் சர்மாவை தூக்கிலிடுவதாக இருந்தால், அவுரங்காபாத்தில் உள்ள சதுக்கத்தில் வைத்து தூக்கிலிடுங்கள்” என கூறியுள்ளார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” இஸ்லாம் அமைதி மார்க்கம். உண்மைதான், மக்கள் கோபமாக இருக்கிறார்கள், நூபுர் ஷர்மாவுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்களும் கோருகிறோம். அவர் எளிதில் விடுவிக்கப்பட்டால், அது (மத உணர்வுகளை புண்படுத்துவது) முடிவற்றதாக இருக்கும். எந்தவொரு ஜாதி, மதம், மதத் தலைவர் அல்லது நம் நபிக்கு எதிராக யாரேனும் ஒருவர் இது போன்ற கருத்துக்களைக் கூறினால், கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கையை உறுதி செய்யும் சட்டம் இருக்க வேண்டும் என்று நாங்கள் கூற விரும்புகிறோம். அவரை கட்சியில் இருந்து நீக்குவது மட்டும் போதாது.” என்று தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட்: நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போராட்டம் – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “நுபுர் சர்மாவை நம் நாட்டின் சட்டத்தின் படி தண்டிக்க வேண்டும். இது தான் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. இதற்கு அனைவரும் (கட்சி உறுப்பினர்கள்) உடன்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Source: The Indian Express

BJPயின் ரகசிய திட்டம் | Maruthaiyan Interview | Modi | Hitler | Aryan Vs Dravidian | DNA

முஹம்மது நபி தொடர்பான கருத்து தெரிவித்த விவகாரம் – நுபுர் சர்மாவை தூக்கிலிட கோரிய எம்.ஐ.எம் எம்.பி கருத்தால் சர்ச்சை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்