மலபார் கோல்ட் நகைக்கடையின் அட்சயத் திருதியை விளம்பரத்தில், “இந்து மத கலாச்சாரம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் இந்த நகைக்கடையை மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று சமூக வலைதளங்களில் இந்துத்துவவாதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அட்சயத் திருதியை முன்னிட்டு புதிய விளம்பரத்தை மலபார் கோல்ட் நகைக்கடை வெளியிட்டுள்ளது. இதில், பொட்டு வைக்காத கரீனா கபூரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்து கலாச்சாரத்தின்படி பண்டிகையின் போது ஒவ்வொரு இந்து பெண்ணும் பொட்டு அணிவது வழக்கம். பொட்டு வைக்காத இந்த புகைப்படத்தின் மூலம் இந்துக்கள் மத உணர்வு புண்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்களின் மத உணர்வுகளை மதிக்காத மலபார் கோல்ட் நகைக்கடையைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதேப்போன்று கடந்தாண்டு டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்திற்கு எதிராக ‘லவ் ஜிகாத்’ என்று பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அந்த விளம்பரத்தை அந்த நிறுவனம் திரும்ப பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.