இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த வருவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக கோயில் பொது தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
அதில், நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் தொடர்பாகவும், நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான சொத்து விபரங்கள், கட்டளைதாரர்கள், நகைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கணக்கெடுத்து விசாரணை செய்து, ஆய்வு நடத்துவதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (மே 30) கோயில் பொது தீட்சிதர்கள், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இது எங்களை கட்டுப்படுத்தாது” என்று கூறி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலில் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தின் நகல்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கும் தீட்சிதர்கள் அனுப்பியுள்ளனர்.
Source : hindu tamil
தமிழ்நாட்டை குறிவைக்கும் அண்ணா ஹசாரேக்கள் I Maruthaiyan Interview
]https://youtu.be/mgOksuCPUpU
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.