ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் உருவத்தை பொறிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து மகாசபா முன்னாள் தலைவருமான சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லும் சாலைக்கு சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.