ஆக்ரா பேகம் சாஹிபா மசூதிக்கு கீழ் புதைக்கப்பட்டுள்ள இந்து கடவுள் சிலைகளை மீட்கக் கோரி ஒன்றிய அரசு மற்றும் இந்தியத் தொல்லியல் துறைக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கின் மனுதாரர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மசூதியின் படிக்கட்டுகளை அடியில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதால், படிக்கட்டுகளில் பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி: ஷாஹி இத்கா மசூதியை இந்துத்துவத்தினர் உரிமை கோரிய மனு – விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்பு
மதுராவின் கேசவ் தேவ் கோவிலிலிருந்து எடுக்கப்பட்ட விலையுயர்ந்த சிலைகள் ஆக்ராவின் பேகம் சாஹிபா மசூதியின் படிக்கட்டுகளின் கீழ் முகலாய பேரரசர் அவுரங்கசீப் என்பவரால் 1670 ஆம் ஆண்டில் புதைக்கப்பட்டதாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கின் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவில் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 80 இன் கீழ் உள்ள அறிவிப்பிற்கு இரண்டு மாத காலத்திற்குள் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இது ஒரு சிவில் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படும்.
முகலாய பேரரசர் அவுரங்கசீப் மதுராவில் உள்ள கோயிலை அழித்து அதன் படிக்கட்டுகளில் கிருஷ்ணரின் “நகைகள் பதித்த” சிலைகளை புதைத்ததாக மனுதாரரின் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
Source : India Today
அடித்த கொள்ளையில் பங்கு வெளிவராத உண்மைகள் I Karikalan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.