புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் அனுப்பிய சுற்றிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுடளான தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் உள்ளூர் (தமிழ்) மொழியிலே இருக்கும் என்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா? – பொள்ளாச்சி மா உமாபதி
“புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் பணிகளுக்கு அலுவல் மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஜிப்மரின் கொள்கையில் எந்தவித புதிய மாற்றமும் இல்லை, அலுவல் மொழிக்கொள்கையின்படி இந்தி பேசாத மாநிலங்களில் பெயர் பலகைகள் மற்றும் அடையாளப்பலகைகள் ஒன்றிய அரசாங்கத்தினால் பொதுமக்களின் தகவலுக்காக உள்ளூர் மொழியில் காட்சிப்பபடுத்த வேண்டும் என்று உத்தரவு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை இந்தியில் பேசுங்கள் என்று தான் முந்தைய அறிக்கையில் கூறியிருந்தோம், மாறாக ஹிந்தி தான் பேச வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`குறுஞ்செய்தியிலும் இந்தித் திணிப்பா’ – எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சாடல்
அலுவல் தொர்பான விவகாரஙகள் குறித்த கடிதங்கள் வழக்கமான ஹிந்தி மொழியிலேயே தொடரும். இது 30 ஆண்டுகளுக்காக மேலாக இங்கு நடைமுறையில் உள்ளது. இதில் மொழி மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை” என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source : newindianexpress
இலங்கையில் நடப்பது இது தான்? | Tu Senan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.