“அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். ஆகவே உலகத்தோடு போட்டிப்போட இந்தி உதவாது ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் என ராகுல்காந்தி பேசியுள்ளார்.
ராஜஸ்தானில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று ஆல்வாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக தலைவர்கள் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுவதாக குற்றம் சாட்டினார்.
பாஜக தலைவர்கள், எங்கே சென்றாலும் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகிறார்கள். பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்கிறார்கள்.பெங்காலி இருக்கலாம், இந்தி இருக்கலாம், ஆனால் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்’.
இந்த தலைவர்களிடம் அவர்களின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? என கேட்டுப்பாருங்கள். அமித்ஷா முதல் பாஜக முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் படிக்கிறார்கள்.
இந்தி திணிப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இந்தி பலகை அகற்றம்
‘மாணவர்கள் இந்தி படிக்க வேண்டாம் என நான் கூறவில்லை. நீங்கள் இந்தி, தமிழ் என அனைத்து இந்திய மொழிகளையும் படிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். உலகோடு போட்டிப்போட இந்தி உதவாது ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் எனவே ஏழைகளின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்று அமெரிக்கா சென்று அங்குள்ளவர்களுடன் போட்டிப்போட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றும் தெரிவித்தார்.
Source : india today
GOAT மெஸ்ஸியும் ஆட்டுக்குட்டியும் | கால்பந்தில் ஜோசியம் பார்க்கும் இந்தியா | Aransei Roast | Messi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.