Aran Sei

தமிழ்நாட்டில் ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் இந்தி உள்ளது: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கருத்து

மிழ்நாட்டில் இந்தி மொழி என்பது ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் உள்ளது என்று தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

“நீங்கள் இந்தி கற்றுக் கொண்டால் ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். உங்களுக்கு வேலை கிடைக்கிறதா? எங்கள் நகரமான கோயம்புத்தூரில் சென்று பாருங்கள், இந்தி பேசுபவர்கள் அங்கு பானிபூரி விற்கிறார்கள் என்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பொன்முடி பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் நமக்கென்று சொந்தக் கல்வி முறையை நாம் பின்பற்ற வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில புதிய நல்ல கொள்கைகளையும் பின்பற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி எப்போதுமே தேசிய மொழியாகாது – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உறுதியாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும். இப்போது ஆங்கிலம் என்பது சர்வதேச மொழியாக மாறிவிட்டது என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.

Source : NDTV

பிரியாணி தடை திமுக ஆட்சியை முடக்கும் சதி | Sangathamizhan Interview

தமிழ்நாட்டில் ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் இந்தி உள்ளது: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்