Aran Sei

இந்தி திணிப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இந்தி பலகை அகற்றம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இந்தி பலகை பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அழிக்கப்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகையை மறைத்தபடி, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த பலகை வைக்கப்பட்டது. தமிழில் சேவை மையம் என்பதற்கு பதிலாக சகயோக் என்று எழுதப்பட்டிருந்தது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது அப்பட்டமான இந்தி திணிப்பு என்று கண்டித்திருந்தனர்.

ஒன்றிய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் ரயில் நிலையத்தில் தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். கூடுதலாக வேண்டுமானால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை வைத்துக் கொள்ளலாம்.

1965-ல் நேர்ந்த இந்தி எதிர்ப்பு எழுச்சியை விட, 2022ல் தமிழர்கள் கூடுதல் எழுச்சி பெற வேண்டும் – இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேச்சு

ஆனால், திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ்ச் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற ஹிந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. ஹிந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை ஹந்தித் திணிப்பாகும் என்று பாமக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் இன்று காலை இந்த ஹிந்தி திணிப்பு தகவல் பலகையை அகற்றியுள்ளனர்.

Hindi Theriyadhu Poda I History of Hindi Imposition detailed Explanation I Maruthaiyan Interview

இந்தி திணிப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இந்தி பலகை அகற்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்