Aran Sei

இமாச்சல பிரதேச தேர்தல்: பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்

மாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைவது உறுதியாகியுள்ளது.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

குஜராத் தேர்தல்: 135 பேர் பலியான பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக அமோக வெற்றி – பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக

இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைவது உறுதியாகியுள்ளது.

ஆளும் கட்சியான பாஜக 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் தோல்வி உறுதியாகியுள்ளது. மேலும், சுயேட்சைகள் 3 பேர் முன்னிலையில் உள்ளனர்.

39 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. இதன் மூலம் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

Source : NDTV

KT ராகவனின் பூஜையறை ரகசியம் | எல்லாம் கேசவ விநாயகம் ட்ரெயினிங் | Aransei Roast | KT Raghavan | BJP

இமாச்சல பிரதேச தேர்தல்: பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்