Aran Sei

ஹிஜாப் அணிந்து போராடிய மாணவிகள் மேல் வழக்குப் பதிவு -144 உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு

ர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள அரசுப் பல்கலைக்கழக மாணவிகள் 15 பேர் மீது 144 தடை உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிப்பிரவரி 16ஆம் தேதி, துமகுருவில் உள்ள அரசு எம்பிரஸ் ஜூனியர் இளங்கலை கல்லூரியில், ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்த சுமார் 40 மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அம்மாணவிகள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துணை ஆணையரின் தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, அம்மாணவிகள் சிறிது தூரம் பேரணி நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம்(பிப்பிரவரி 17), உதவி ஆணையர் அஜய், பல்கலைக்கழக இணை இயக்குநர் கங்காதர், கல்லூரி முதல்வர் சண்முகப்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மதுரை: ஹிஜாபுக்கு எதிப்பு தெரிவித்த பாஜக பூத் ஏஜெண்ட் – பூத் ஏஜெண்ட்டை வெளியேற்றிய பொதுமக்கள்

பின்னர், உதவி ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், தலைமையாசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர்ரில் எந்த மாணவியின் பெயடும் குறிப்பிடவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் கூறியுள்ளது.

இதற்கிடையில், நேற்று முன்தினம்(பிப்பிரவரி 17) மாலை, ஹிஜாப்பை அணிவதற்கு அனுமதிக் கோரி, தாலுகா அலுவகத்தின் அருகே மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் இரண்டு ஆசிரியர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source: New Indian Express

ஹிஜாப் அணிந்து போராடிய மாணவிகள் மேல் வழக்குப் பதிவு -144 உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்