கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மற்றவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அரசியலமைப்புச் சட்டத்தை உயர்வாக வைத்திருக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை தெரிவித்தார்.
ஹிஜாப் குறித்து பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளத்த அவர், நான் இரண்டு விஷயங்களைப் பற்றி பேச வேண்டும். மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உயர்வாக கருதி பின்பற்ற வேண்டியது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாக மனதில் கொள்ள வேண்டும்,” என்று சின்ஹா கூறினார்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து வந்துள்ளது; மாநில உரிமையை மீட்போம் – மு.க.ஸ்டாலின்
கர்நாடக மாநிலம் உடுப்பி உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். கல்லூரியின் நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமையை மீறுவதாக பலர் தெரிவித்தனர்.
காவி துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பி இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் சிலர். தேசியக் கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காவிக்கொடியை ஏற்றினர்.
இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆதரவாக நீல துண்டு அணிந்து ’‘ஜெய்பீம்’ முழக்கம் எழுப்பப்பட்டது. அல்லாகு அக்பர் எனும் முழக்கம் இந்திய அளவில் பேசு பொருளானது. இந்த நிகழ்வு இந்திய நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வலதுசாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.