ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறு இஸ்லாமிய மாணவிகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை சமூக வலைதளங்களில் சிலர் பகிர்வதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பல்கலைகழக கல்லூரியில், ஹிஜாப் அணிய அனுமதிக் கோரி போராடும் மாணவிகளின் புகைப்படம், அலைப்பேசி எண், பெற்றோரின் எண், முகவரி, கல்லூரி சேர்க்கை படிவம் ஆகியவை வாட்சப் குழுக்களில் பரப்பப்பட்டுள்ளன.
அவர்களுக்கு அவர்களது பெற்றோர்களுக்கும் அலைப்பேசியில் மிரட்டல்கள் வருவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
பாதுக்காப்பாக வைக்கப்படவேண்டிய கல்லூரி சேர்க்கை படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எப்படி பொது வெளிக்கு வந்தது என்று கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாணவிகள் வலியுறுத்தி இருந்தனர்.
ஹிஜாப் விவகாரம்: அல்லாஹு அக்பர் முழக்கமிட்ட மாணவிக்கு ஆர்.எஸ்.எஸ் இஸ்லாமிய பிரிவு ஆதரவு
இந்நிலையில், இது தொடர்பாக, உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.விஷ்ணுவர்தனிடம் புகார் அளித்த பெற்றோர், மாணவிகளின் அலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களைப் பொதுவெளியில் பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இந்த விவரங்களைப் பயன்படுத்தி, மாணவிகளை மர்ம நபர்கள் அச்சுறுத்தலாம் என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, காவல் கண்காணிப்பாளர் என்.விஷ்ணுவர்தன் கூறுகையில், “மாணவிகளின் பெற்றோர் தன்னிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
Source: PTI, The Quint
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.