கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பாஜக அரசின் செயல்பாடுகள் மற்றும் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவின் திருவுருவப்படத்தை நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் ஆளுநர் உரையின் போது கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
கர்நாடகாவில் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவையின் 10 நாள் கூட்டுக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
காவிக்கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறக்கூடும் என்று கூறிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
ஹிஜாப் பிரச்சினையில் காவி துண்டு அணிந்து மாணவர்களை அனுப்பி பிரச்சினையை உருவாக்கியது பாஜக தான் என்று அமைச்சர் ஈஸ்வரப்பாவே ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் தான் நாங்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்துகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
“ஈஸ்வரப்பாவை கர்நாடக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் ஆளுநர் ஆகியோரிடம் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source : the new indian express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.