கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மாணவிகளின் தாக்கல் செய்த மனு தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அம்மாணவிகளின் தனிப்பட்ட விவரங்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக பாஜக பகிர்ந்துள்ளது.
மனுதாரர்களில் சிலர் மைனர்கள் என்பதால் அந்த ட்வீட் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கருப்பு பட்டை அணிந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
மாணவிகளின் தனிப்பட்ட விவரங்களின் ஸ்கிரீன்ஷாட்களாக இணைத்து எழுதப்பட்ட பாஜகவின் ட்வீட்டில், “#HijabRow சம்பந்தப்பட்ட மாணவர்களில் ஐந்து பேர் மைனர்கள். மைனர் பெண்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு எந்த குற்றவுணர்வும் இல்லையா? தேர்தலில் வெற்றி பெற அவர்கள் எவ்வளவு கீழ்நிலையில் செல்லுவார்களா?” என்று எழுதப்பட்டுள்ளது.
இதற்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான நாடாளுமன்ற ஆணையத்தின் உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, காவல்துறை, ட்விட்டர் நிறுவனம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகிவற்றின் ட்விட்டர் ஹேண்டில்களை டேக் செய்து, பாஜகவின் ட்வீட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
I demand @ncpcr also to take this up immediately. This is a criminal act to share names and addresses of minors. This is unacceptable https://t.co/Vj0NRcWvFb
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) February 15, 2022
மற்றொரு ட்வீட்டில், “தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும். மைனர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளைப் பகிர்வது ஒரு குற்றச் செயல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கர்நாடக பாஜக தனது ட்வீட்டை நீக்கியுள்ளது.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.