Aran Sei

I love Hijab: ஹிஜாப் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடிய இஸ்லாமியப் பெண்கள்

ர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணிவர்களை வகுப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மைசூரு மாவட்டத்தில் இஸ்லாமிய மாணவர்கள் ‘நான் ஹிஜாப்பை நேசிக்கிறேன்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள கர்நாடகத்தின் ஆளுங்கட்சியான பாஜக, தாலிபான்மயமாக்கலை அனுமதிக்க மாட்டோம் என்றும் மாணவிகள் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால், ஹிஜாபைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

‘ஹிஜாப் அணிந்த எங்களை வகுப்புக்கு அனுமதியுங்கள்’- கல்லூரி முதல்வரிடம் உரிமை கோரும் இஸ்லாமிய மாணவிகள்

இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 4), ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மைசூரு நகரில் இஸ்லாமிய மாணவர்கள் ‘ஐ லவ் ஹிஜாப்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க பண்ணிமண்டபம் அருகே மாணவர்கள் குழு ஒன்று கூடி ஹிஜாப் அணிந்த மாணவர்களை வகுப்புகளுக்குள் அனுமதிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். ‘நான் ஹிஜாபை விரும்புகிறேன்’ என்ற பதாகைகளை ஏந்திய போராட்டத்தில் கலந்துக்கொண்ட மாணவர்கள், பின்னர் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர்.

மாணவிகள் ஹிஜாப் அணிய தடை: காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுகிறது – மெஹபூபா முப்தி விமர்சனம்

மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, பசவராஜ் பொம்மையிடம் விளக்கம் அளித்துள்ளனர்.

மாணவர்கள் களத்தில் இறங்கினால், அதை தாங்கும் சக்தி பாஜக அரசிற்கு இல்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் யு.டி.காதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சதீஷ் ஜாரகிஹோலி, “ஹிஜாப் விவகாரம் மாநிலம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. அதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வர எதிர்ப்பு: காவி துண்டுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்

மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் பி.இசட். ஜமீர் அஹ்மத் கான் கூறுகையில், “ஹிஜாப் அணிந்ததற்காக மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, குந்தாபூரில் சாலையில் நிற்பதைக் கண்டு வேதனை அடைந்தேன். இது தவறான செயல். இதன் பின்னணியில் ஆளும் பாஜக உள்ளது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Source: PTI, IANS

I love Hijab: ஹிஜாப் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடிய இஸ்லாமியப் பெண்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்