கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் தரவுகளை கர்நாடக அரசு சேகரித்து வருவதாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
1 முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளின் தகவல்களை சேகரிக்குமாறு தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளை கர்நாடக அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரியான தரவுகளுடன் ஊடகங்களை எதிர்கொள்ள, இந்த தரவுகள் சேகரிக்கப்படுவதாக கர்நாடக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விக்கான அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.
தினசரி செய்திகளின் அறிக்கைகள்குறித்து டெக்கான் ஹெரால்டிடம் பேசிய அமைச்சர் நாகேஷ், ”உயர்நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக பள்ளிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பெண்களின் எண்ணிக்கையை மாறுபட்ட அளவில் அச்சு மற்றும் இணைய ஊடகங்கள் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன. உண்மையில், இந்த பிரச்னையினால் மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது கல்வியில் கவனம் செலுத்துகிறார்களா?. என்பதை அறிவதே எங்கள் நோக்கம். சுற்றி நடக்கும் பிரச்னைகள்குறித்து கவலை கொள்ளாமல் எத்தனை மாணாக்கர்கள் வகுப்பறைக்கு செல்கிறார்கள் என்பதை மட்டுமே நாங்கள் அறிய விரும்புகிறோம்” என கூறியுள்ளார்.
சட்டமன்றத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ தாக்கல் செய்வதற்காக கூட தரவுகள் சேகரிக்கப்படலாம் என கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தாக டெக்கான் ஹெரால்டு தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர் மாணவிகள் தரவுகள் சேகரிக்கபடுவது குறித்து தெரிவித்துள்ள பெங்களூரு உள்ள ஒரு தனியார் கல்லூரியின் முதல்வர், “ஹிஜாப் தடையைக் கருத்தில் கொண்டு இஸ்லாமியர் மாணவிகள் பயிலும் கல்லூரிகள் இருக்கும் பகுதியைப் பதற்றமான பகுதியாக அறிவிக்கப்படலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகா: ஆசிரியர்கள் ஹிஜாப் அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகம் – ஆங்கிலப் பேராசிரியர் ராஜினாமா
உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறியதாக பிப். 18 தேதி மட்டும் 14 பள்ளிகளைச் சேர்ந்த 162 மாணவிகள் பள்ளியில் இருந்து திரும்ப அனுப்பப்பட்டனர் என் டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.