Aran Sei

ஹிஜாப் வழக்கு: விரைவில் தீர்த்து வைக்க விரும்புவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து

ஹிஜாப் தொடர்பான வழக்கை இந்த வாரத்திலேயே தீர்த்து வைக்க விரும்புவதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோருவதாகவும் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (பிப்பிரவரி 22) தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு கல்லூரியில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அப்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார், “கல்வி நிலையங்களுக்கு மாணவிகள் வளையல்கள் உள்ளிட்ட 100 விதமான மத அடையாளங்களை அணிந்து வரும்போது, அரசு ஹிஜாப்பை மட்டும் குறிவைப்பது ஏன் என தெரியவில்லை. கிறிஸ்துவர்களின் சிலுவை, சீக்கியர்களின் தலைப்பாகை உள்ளிட்ட எந்த மதத்தின் அடையாளமும் தடை செய்யப்படவில்லை. ஆனால், இஸ்லாமிய மாணவிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என வாதிட்டார்.

கே.பி.எஸ்.மணி – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல்

கல்வி நிலையங்களுக்கு மாணவ, மாணவிகள் பல்வேறு மத அடையாளங்களை அணிந்து வரும்போது அரசு ஹிஜாபை மட்டும் குறி வைப்பது ஏன்?. என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி, நீதிபதி ஜே எம் காஜி மற்றும் நீதிபதி கிருஷ்ணா எம் தீட்சித் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு ஹிஜாப் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.

பிப்ரவரி 18 அன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் கீழ் ஒரு அத்தியாவசிய மதப் பழக்கம் அல்ல என்றும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தது மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் பிரிவு 25 யை மீறாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

இந்த வழக்கை இந்த வாரத்திலேயே முடிக்க விரும்புகிறோம், இந்த வழக்கை இந்த வார இறுதிக்குள் முடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள் என்று கர்நாடக தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி கூறியுள்ளார்.

Source : PTI

ஹிஜாப் வழக்கு: விரைவில் தீர்த்து வைக்க விரும்புவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்