Aran Sei

ஹிஜாப்: “மதக்கலவரத்தை ஏற்படுத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் திட்டம்” – வேல்முருகன்

தக்கலவரத்தை ஏற்படுத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதச்சார்பின்மைதான் இந்தியாவின் அஸ்திவாரம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அஸ்திவாரமும் அதுதான். ஆனால், அந்த அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்கப் பரிவாரங்கள் களம் இறங்கியுள்ளனர்.

இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை ஒடுக்க கூடாது – மலாலா யூசுஃப்ஸை

குஜராத்தில் அம்மாநில அரசால் இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்களைப் போன்று, கர்நாடகத்திலும் அதற்கான வேலைகளில், ஆர்.எஸ்.எஸ், பாஜக,சங்கப் பரிவாரங்கள் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

அதன் முன்னோட்டம் தான், கர்நாடகாவில் ஆறு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிப்பு. ஹிஜாப் அணிந்து வந்த இசுலாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதி மறுப்பு. ஹிஜாபுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்கப் பரிவாரங்கள் மாணவர்களிடம் மதவெறி வன்முறை தூண்டுதல் என அனைத்து நடவடிக்கையுமே. ஆர்.எஸ்.எஸ், பாஜக,சங்கப் பரிவாரங்கள் வன்முறை என்பது, கர்நாடகாவோடு நிற்பதில்லை, தமிழ்நாடு, கேரளா என அடுத்தடுத்து மாநிலங்களில் தொடரும். அதுவே, ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களின் இலக்கு.

ஹிஜாப் விவகாரம்: என்ன உடை அணிய வேண்டும் என்பது பெண்களின் உரிமை – பிரியங்கா காந்தி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்துக்கள் திருநீறு பூசிக் கொள்ளவும், சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணிந்து கொள்ளவும், அனுமதிக்கிறது. அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணியும் முறையும் இருக்கிறது.

ஆனால், இதனையெல்லாம் புரிந்து கொள்ளாத அல்லது அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காத, சங்கப் பரிவார கும்பல்களின்,  இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாதென்று,  நடத்திவரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும். ஏனென்றால், சங்கப் பரிவார கும்பல்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடாக இருக்கலாம்.

‘பள்ளிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்கும் ம.பி., அரசு’ – கல்வித்துறை அமைச்சர் தகவல்

எனவே, மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் ஜனநாயக நடைமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் மோடியின் கும்பலை தூக்கி எரிய, ஒற்றை கருத்துள்ள மாநிலங்களை ஒன்று திரட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு உள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப்: “மதக்கலவரத்தை ஏற்படுத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் திட்டம்” – வேல்முருகன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்