Aran Sei

ஹிஜாப் விவகாரம்: முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஹிஜாபுக்கு ஆதரவாக கடிதம்

500 வழக்கறிஞர்கள், 2 முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் துவாரகநாத் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் தடையை ஒட்டி அதன் மீதான விவாதத்திற்குத் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து கவலையளிப்பதாகவும், இது இஸ்லாமியப் பெண்கள் மற்றும் மாணவிகளைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவதற்கே வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயிலுக்கு வழிபட வந்தவரை சாதிப்பெயர் சொல்லி திட்டிய தீட்சிதர்கள் – 20 பேர் மீது வன்கொடுமை வழக்கு

கல்வி நிலையங்களுக்கு மாணவ, மாணவிகள் பல்வேறு மத அடையாளங்களை அணிந்து வரும்போது அரசு ஹிஜாபை மட்டும் குறி வைப்பது ஏன்?. எனக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார், “கல்வி நிலையங்களுக்கு மாணவிகள் வளையல்கள் உள்ளிட்ட 100 விதமான மத அடையாளங்களை அணிந்து வரும்போது, அரசு ஹிஜாப்பை மட்டும் குறிவைப்பது ஏன் என தெரியவில்லை. கிறிஸ்துவர்களின் சிலுவை, சீக்கியர்களின் தலைப்பாகை உள்ளிட்ட எந்த மதத்தின் அடையாளமும் தடை செய்யப்படவில்லை. ஆனால், இஸ்லாமிய மாணவிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என வாதிட்டார்.

Source : newindianexpress

ஹிஜாப் விவகாரம்: முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஹிஜாபுக்கு ஆதரவாக கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்