Aran Sei

கும்பமேளா குறித்து சிஇஏடி டயர் தலைமை செயல் அதிகாரி கருத்து – நிறுவனத்தை புறக்கணிக்க டிரெண்ட்டாகும் ஹேஷ்டேக்

கும்பமேளாவில் கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை என சிஇஏடி டயர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் கோயங்கா கிண்டல் செய்ததை தொடர்ந்து அந்த நிறுவனத்தைப் புறக்கணிக்குமாறு ட்விட்டரில் ஆயிரக்கணக்காணோர் பதிவிட்டு வருகின்றனர்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை நதிக்கரைகளில் நடைபெறும் கும்பமேளா விழா, உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விழாவில், கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது பல லட்சக்கணக்காணோர் கூடி வருகின்றனர். மேலும், இதில் பங்கேற்கும் பலர் கொரொனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்றவற்றை பின்பற்றுவதில்லை.

இது தொடர்பாக சிஇஏடி டயர்ஸ்   நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் கோயங்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Photo Credit :Twitter/@harshgoenka

பதிவு எதிர்மறையான கருத்தாக பார்க்கப்பட்டதையடுத்து  அவர் பதிவை நீக்கியிருந்த நிலையில், சிஇஏடி நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை கூறுவிதமாக #BoycottCeat என்ற ஹேஷ்டேக்குடன் பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

 

கும்பமேளா குறித்து சிஇஏடி டயர் தலைமை செயல் அதிகாரி கருத்து – நிறுவனத்தை புறக்கணிக்க டிரெண்ட்டாகும் ஹேஷ்டேக்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்