Aran Sei

‘அமெரிக்காவிலும் தலித்துகளுக்கு எதிராக தொடரும் சாதியப் பாகுபாடு’ – கலிபோர்னியா பல்கலைக்கழக முன்னாள் மாணவி குற்றச்சாட்டு

மெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற நேஹா சிங் என்ற இந்திய மாணவி சாதிப் பாகுபாடு என்பது இங்கு இயல்பான ஒன்று என்கிறார்.

இந்தியச் சாதியமைப்பு முறையையும், அதன் பாகுபாட்டையும் அப்போது பல்கலைக்கழகம் அறிந்திருக்கவில்லை. உயர்சாதி இந்திய மாணவர்கள் தலித் மாணவர்களிடம் அவர்களது கடைசி பெயரான சாதிப்பெயரைத் திரும்பத் திரும்பக் கேட்பார்கள். நான் தலித் என்பதால் காரணமாக தெற்காசிய நடனக் குழுக்களில் இருந்து விலகினேன்.

கிருஸ்தவம் என்பது இந்திய மதம் அல்ல, எனவே அனைத்து இந்தியக் கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்பட்ட சாதியினரே என்று அங்குள்ள இந்திய உயர்சாதி மாணவர்கள் பேசியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

4,80,000 மாணவர்கள் படிக்கும் மிகப்பெரிய அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் மீதான பாகுபாடு எதிர்ப்புக் கொள்கைகளில் சாதியைச் சேர்க்கப்பட்டுள்ளதை நேஹா சிங் வரவேற்றுள்ளார்.

லட்சக்கணக்கான மக்களோடு மதம்மாறிய அம்பேத்காரை என்ன செய்வார்கள் வலதுசாரிகள்? – சத்ய சாகர்

பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு பல்வேறு மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் பல்கலைக்கழகத்தின் பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் சாதியைச் சேர்க்க வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றியதன் விளைவாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு எண்ணற்ற ஆசிரியர்கள் உட்படப் பலரும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இது இந்தியா மற்றும் தெற்காசிய வம்சாவளி நபர்களைத் தனிமைப்படுத்தும் என்று 80 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய ஒரு சிறிய குழு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

‘From Shadows to Stars’ – ரோகித் வெமுலா நினைவு நாள்

“எனது பல்கலைக்கழகத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் மாணவனாக இருந்தபோது பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் சாதி சேர்க்கிக்கப்பட்டிருந்தால், என் மீது ஏவப்பட்ட சாதிப் பாகுபாடுகளை எனது பேராசிரியர்களிடம் சொல்லியிருப்பேன்” என்று நேஹா சிங் தெரிவித்துள்ளார்.

நாம் கதைகளால் வீழ்த்தப்பட்டவர்கள் – ஸ்டாலின் ராஜாங்கம்

தலித் எனும் காரணத்தினால் எனது நட்பை முறித்துக் கொண்ட போன நெருங்கிய தோழிகளின் மீது அப்போது கோவமடைந்திருந்தேன். சாதியின் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்த எனக்கு இங்கும் சாதி தொடர்வதை எண்ணி ஒவ்வொரு முறையும் நான் கோவமடைந்திருக்கிறேன் என்று நேஹா சிங் கூறியுள்ளார்.

Source : The Wire

‘அமெரிக்காவிலும் தலித்துகளுக்கு எதிராக தொடரும் சாதியப் பாகுபாடு’ –  கலிபோர்னியா பல்கலைக்கழக முன்னாள் மாணவி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்