Aran Sei

“தாண்டவ் படக்குழுவினரின் தலையை வெட்டி எடுக்க வேண்டும்” – கங்கனா ரணாவத்தின் டிவிட்டர் பக்கம் முடக்கம்

டந்த வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 15), ‘தாண்டவ்’ எனும் 9 பாகங்களை கொண்ட இணைய வழி தொடர் (Web Series) அமேசான் தளத்தில் வெளியானது. சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள சாதிய சிக்கல்களைப் பற்றி பேசிய படமான, ஆர்டிக்கில் 15 (Article 15) திரைப்படத்தில் பணியாற்றிய கவுரவ் சொலங்கி, இந்தத் தொடருக்கு கதாசிரியராக பணியாற்றியுள்ளார். அலி அப்பாஸ் ஜாபர் இந்தத் தொடரை தயாரித்து, இயக்கியுள்ளார்.

இந்தத் தொடரில் வரும் சில காட்சிகள், இந்து கடவுள்களை அவமதித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. சில அமைப்புகள் இந்தத் தொடரை ஒளிபரப்பிய அமேசான் அலுவலகத்தின் முன் போராட்டங்களையும் நடத்தினர்.

இந்து கடவுள்களை அவமதித்த குற்றச்சாட்டு : தாண்டவ் படக்குழுவினர் மீது வழக்கு

மத்திய பிரதசேத்தைச் சேர்ந்த அமைச்சரான ராமேஷ்வர் ஷர்மா, பாஜக சட்டமன்ற உறுப்பினரான ராம் கடம், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான மனோஜ் கோடக் ஆகியோர் ‘தாண்டவ்’ தொடரை தடை செய்ய கோரியும், ஓடிடி தளங்களுக்கு தணிக்கை குழுவை உருவாக்க கோரியும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

விவசாயிகள் மீது அவதூறு – கங்கனா ராணாவத்தின் வாயை மூட வைத்த தில்ஜீத் – வீடியோ

அமேசான் இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா மெஹ்ரா, எழுத்தாளர் கவுரவ் சொலங்கி மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புதுறை அமைச்சகமும் படக்குழுவினரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தத் தொடரில் வெளிவந்த காட்சிகளால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக, தாண்டவ் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் வீட்டு வேலைக்கு சம்பளமா? – நடிகை கங்கனா ராணாவத் கடும் எதிர்ப்பு

இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத், தன் ட்விட்டர் பக்கத்தில், ”இந்த படக்குழுவினரின் (தாண்டவ்) தலைகளை வெட்டி எடுக்க வேண்டும்” என பதிவு செய்திருந்தார். பின்னர் அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.

‘மதக் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்’: நடிகை கங்கனா மீது குற்றச்சாட்டு

இதையடுத்து ட்விட்டர் நிறுவனம், கங்கனா ரணாவத்தினுடைய டிவிட்டர் பக்கத்தை, சில மணி நேரங்களுக்கு தற்காலிகமாக முடக்கியது. #suspendkanaganaranaut எனும் ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலானது.

”ட்விட்டர் விதிகளை மீறும் எந்தவொரு கணக்கிலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று ட்விட்டர் பக்கத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கங்கனா படத்தில் பணிபுரிய மாட்டேன் – ஒளிப்பதிவாளார் பி.சி.ஸ்ரீராம்

”எங்கள் சேவையில் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த விரும்பும் மக்களை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், எங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி, நீங்கள் யாரையும் குறிவைத்து துன்புறுத்தலில் ஈடுபடக்கூடாது, மற்றவர்களையும் அவ்வாறு செய்ய தூண்டக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் போதைப் பொருள் பயன்பாட்டு விசாரணை : கரண் ஜோஹருக்கு நோட்டீஸ்

”ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவினருக்கோ, கடுமையான உடல் ரீதியான தாக்குதலை வெளிப்படுத்துவோம் எனும் உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம்” என்று டிவிட்டரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கங்கணாவின் ரசிகர்கள் சிலர், சமூக ஊடகங்களில் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், “ஒருவரின் தலையை எடுப்பது” என்பது “ஒருவரை கடுமையாக திட்டுவது ” என்று பொருள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தி சினிமாவை விழுங்க முயற்சிக்கும் பாஜக

பாஜக ஆதரவு நிலைபாட்டில் உள்ள நடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தி சினிமா துறையை (பாலிவுட்) கடுமையாக விமர்சித்ததும், மகாராஷ்ட்ரா மாநிலத்தை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என விமர்சித்தும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

“தாண்டவ் படக்குழுவினரின் தலையை வெட்டி எடுக்க வேண்டும்” – கங்கனா ரணாவத்தின் டிவிட்டர் பக்கம் முடக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்