Aran Sei

மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன: மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- உச்சநீதிமன்றம் வேதனை

நாட்டில் இஸ்லாமியர்களை குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த ஷாகீன் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், வெறுப்பு பேச்சு வாடிக்கையாகி விட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா, இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என பேசியுள்ளதாக குறிப்பிட்டு வாதிட்டார்.

தர்ம சன்சத்: ‘இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என பேசுவது வெறுப்பு பேச்சுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறை

அப்போது நீதிபதிகள், வெறுப்பு பேச்சில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டால்? என கேட்டனர். அதற்கு கபில் சிபல், வெறுப்பு பேச்சில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டால் அவர்களை போகட்டும் என விட்டுவிடுவார்களா? அப்படி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ஜனநாயக, மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன. வெறுப்பு பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை. இது 21-ம் நூற்றாண்டு. அரசமைப்பு சாசனத்தின் 51 ஏ பிரிவு, அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவேண்டும் என கூறுகிறது. இன்று நாம் மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்? என வேதனை வெளியிட்டனர்.

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் – விவாதிக்க மறுத்த மாநிலங்களவை தலைவர்

இந்த மனு தொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடுகிறோம். எந்த மதத்துக்கு எதிராகவும் பேசப்படும் வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக புகார்களுக்கு காத்திருக்காமல், தாமாகவே முன்வந்து வழக்கு பதிவுசெய்ய டெல்லி, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். புகார்களைப் பதிவு செய்ய மறுத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக பார்க்கப்படும். என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Source : theprint

இந்தி தெரியாது போடா…| இடியட் சங்கி சேஷாத்ரிக்கு வைச்ச ஆப்பு | Aransei Roast | Hindi | BJP

மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன: மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்?- உச்சநீதிமன்றம் வேதனை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்