அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விளைபொருட்களை சேமித்து வைக்க இடம் இல்லை என்று கூறி, கொள்முதல் செய்ய முன் கூட்டியே வருமாறு மாநில அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வாட்சப், ஜூம் செயலிகளுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு – ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம் தகவல்
ஏஜென்சிகள் இன்னும் கொள்முதல் செய்யாததால், மண்டிகளிலோ அல்லது சந்தையிலோ தங்கள் விளைபொருட்கள் கவனிப்பாரற்று கிடப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதன் விளைவாக, அம்பாலா, கைத்தல் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள தானிய சந்தைகளில் நூற்றுக்கணக்கான குவிண்டால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் பாரதிய கிசான் யூனியன் (சாருணி) தலைமையில் நடைபெற்றுள்ளது.
மதுரை: 95% கட்டிமுடித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணவில்லை – சு. வெங்கடேசன் கிண்டல்
மண்டிகளுக்கு நெல் விளைச்சல் அதிக அளவில் வரத் தொடங்கினாலும், ஏஜென்சிகள் இன்னும் கொள்முதல் செய்யவில்லை. மேலும், அதிகாரப்பூர்வ கொள்முதல் அக்டோபர் 1 முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேவலமான மனுசாஸ்திரத்த கொளுத்தக்கூடாதா? | Maruthaiyan Interview | A Rasa Controversial Speech Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.