Aran Sei

ஹரியானா:ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியது எனக்கூறும் 9-ம் வகுப்பு பாடநூல் – வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜகவின் முயற்சியென காங்கிரஸ் கண்டனம்

பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 9 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் நிறுவனர்களும் இந்திய சுதந்திரத்திற்கு போராடியதாக கூறப்பட்டுள்ளது.

ஹரியானா மாநில பள்ளிக்கல்வி வாரியம் புதுப்பித்துள்ள 9 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில்தான் இத்தகைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனரான ஹெட்கோவர் ஒரு சிறந்த தேசபக்தர் என்றும் சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம் – மருத்துவத்துறையை காவிமயமாக்குவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

சாவர்க்கர் முக்கியமான சுதந்திர போராட்ட வீரர் என்றும், அவர் இந்துத்துவாவின் தீவிர ஆதரவாளர் மற்றும் இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர் என்று இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப்புத்தகத்தில், “காங்கிரஸ் கட்சியின் அதிகார பேராசை தான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

‘கல்வியை காவி மயமாக்குவதில் என்ன தவறு?’ -துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி

“1940 களில் காங்கிரஸ் தலைவர்கள் “செயலிழந்து போனார்கள்” என்றும் அதற்கு மேல் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர விரும்பவில்லை என்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் எந்த விலை கொடுத்தாலும் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் கூடிய விரைவில் சுதந்திரத்தை பெற விரும்பினர்” என்றும் இப்புத்தகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“முகமது அலி ஜின்னாவிற்கு கிடைத்த முக்கியத்துவம் காரணமாக அவர் அதிக அதிகாரம் பெற்றார். இதனால் ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களால் இந்நாடு பலவீனடைந்தது. எனவே இந்தியா பாகிஸ்தான் பிரிவினைதான் இந்நாட்டில் அமைதியை மீட்டெடுக்க ஒரே வழி என்று இது காங்கிரசை நம்ப வைத்தது” என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாற்றைப் பாடமாக்கிய பல்கலைக்கழகம் – பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்ட கேரள அரசு

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா, “இது கல்வியை ‘அரசியலாக்கும்’ பாஜகவின் வெளிப்படையான முயற்சி. வரலாற்றைக் காவிமயமாக்கி இளைஞர்களை மூளை சலவை செய்ய பாஜக முயற்சிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source : The Wire

இன்னும் 25000 வீடுகள் அகற்றப்பட இருக்கு | RA Puram Govindasamy Nagar Eviction

ஹரியானா:ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியது எனக்கூறும் 9-ம் வகுப்பு பாடநூல் – வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜகவின் முயற்சியென காங்கிரஸ் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்