பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 10ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ‘சிந்து’ சமவெளி நாகரீகத்தை ‘சரஸ்வதி-சிந்து’ நாகரிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய இந்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதி, “பண்டைய இந்திய நாகரிகம் முதலில் தொடங்கிய நதி” எனச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியராக உள்ள ஜக்லன் ஒரு முகநூல் பதிவைப் பகிர்ந்துள்ளார்.
சாதி அமைப்பு முறையை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? ஹரப்பாவினரா? – மரபணு சொல்வது என்ன?
அதில் புராணங்களில் வரும் சரஸ்வதி நதியை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் சரஸ்வதி நதி இருந்ததை நிரூபிக்க முகலாயர் கால ஆதாரங்களைக் காட்டுவது விந்தையாக உள்ளது. ஒரு கட்டுக்கதையை நிரூபிக்க அறிவியலைப் பயன்படுத்த முடியாது. மறைந்திருக்கும் உண்மையைத்தான் நம்மால் அறிவியல் கொண்டு கண்டுபிடிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : The Wire
இன்னும் 25000 வீடுகள் அகற்றப்பட இருக்கு | RA Puram Govindasamy Nagar Eviction
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.