Aran Sei

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – பிரதமர், குடியரசுத் தலைவருக்கு முன்னாள் படைத் தளபதிகள் கடிதம்

த்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்  இந்திய இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வெளிப்படையான அழைப்பு  விடுத்தது  குறித்து ஆயுதப் படைகளின் முன்னாள் தலைமைத் தளபதிகள் ஐந்து பேரும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், நமது எல்லையில் உள்ள தற்போதைய சூழ்நிலையை குறிப்பிட்டு, வன்முறைக்கான இத்தகைய அழைப்புகள் உள்நாட்டில் ஒற்றுமையை சீர்குலைக்கும், மேலும் வெளிப்புற சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

துணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வு நிறுத்திவைப்பு – தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் எதிர்த்ததால் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு

நாட்டின் அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடு எதுவாக இருந்தாலும் அது அந்நிய சக்திகளை ஊக்குவிக்கும். நமது இந்தியச் சமூகம் பன்முகத்தன்மை கொண்டது. இந்தச் சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராக விதைக்கப்படும் வன்முறை சீருடை தாங்கிய வீரர்கள், மத்திய ஆயுதப் படையினர், காவல் துறையினர் என அனைவரின் மத்தியிலும் நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்கும்.

தர்ம சன்சத் நிகழ்ச்சியின் மூன்றாம் நாளில் இந்து சாதுக்கள் சிலரின் பேச்சுக்கள் அதிர்ச்சியளிக்கிறது. வலிமையான ஆயுதங்களுடன் யுத்தத்திற்கு வருபவர்கள் வெல்வார்கள். சாஷ்ட்ரமேவ ஜெயதே (ஆயுதங்கள் வெல்லட்டும்). நாங்கள் எங்கள் தர்மத்திற்காக உயிரையும் கொடுப்போம். தேவைப்பட்டால், அதற்காக கொலையும் செய்வோம் என்று தெரிவித்திருந்தனர்.

இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கள் பொதுவெளியில் பேசப்படுவதை ஏற்க முடியாது. வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகளை நாங்கள் அனுமதிக்க முடியாது. இது உள்நாட்டுப் பாதுகாப்பின் கடுமையான மீறல்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், நமது தேசத்தின் சமூகக் கட்டமைப்பைக் சிதைத்துவிடும்.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்ப பெரும் வரை நாகாலாந்தில் போராட்டங்கள் தொடரும் – நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு

ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஆயுதம் ஏந்தி சஃபாயி அபியான் அதாவது வேற்று மதத்தினரை அழிக்கும் நிகழ்வில் பங்கேற்குமாறு ஒரு சாது அழைப்பு விடுக்கிறார் . நம் சொந்த மக்களையே இன அழிப்பு செய்யச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். இது கண்டனத்துக்குரியது. ஏற்றுக்கொள்ளவே முடியாதது.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடித்த்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வெறுப்பு பேச்சைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தின் எழுபத்தாறு வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கும் கடிதம் எழுதி இருந்த்து நினைவுகூரத்தக்கது. .

ஹரித்வாரில் நடைபெற்ற இந்த மாநாடு, கடந்த காலங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மதத் தலைவர் யதி நரசிம்மானந்த் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Source: NDTV

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – பிரதமர், குடியரசுத் தலைவருக்கு முன்னாள் படைத் தளபதிகள் கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்