Aran Sei

ஹரித்வாரில் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – மேலும் 10 பேர் மீது வழக்குப் பதிவு

ரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசியதாக பத்து பேர் மீது இரண்டாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நதீம் அலி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(ஜனவரி 2) ஹரித்வாரில் உள்ள ஜ்வாலாபூர் காவல் நிலையத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜ்வாலாபூர் மூத்த துணை கண்காணிப்பாளர் நித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

தர்ம சன்சத் நிகழ்ச்சியின் அமைப்பாளர் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, ஜிதேந்திர நாராயண் தியாகி, சிந்து சாகர், தரம்தாஸ், பர்மானந்தா, சாத்வி அன்னபூர்ணா, ஆனந்த் ஸ்வரூப், அஷ்வினி உபாத்யாய், சுரேஷ் சாஹ்வான், பிரபோதானந்த் ஜி ஆகிய பத்து பேர்மீது இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – சிறப்பு விசாரணைக் குழு அமைத்த உத்தரகண்ட் காவல்துறை

ஜ்வாலாபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நகர காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அக்காவல் நிலையத்தில்தான் இச்சம்பவம் தொடர்பாக முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நேற்று(ஜனவரி 2), இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதிவரை ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களை பேசியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, உத்தரகண்ட் பாஜக அரசுமீது கடும் அழுத்தம் உருவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, இரண்டு நாட்களாக டேராடூன் மற்றும் ஹரித்வாரில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Source: PTI

ஹரித்வாரில் சிறுபான்மையினர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – மேலும் 10 பேர் மீது வழக்குப் பதிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்