Aran Sei

பெண்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் யதி நரசிங்கானந்திற்கு பிணை – ஹரித்வார் நீதிமன்றம் உத்தரவு

ரித்வார் தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யதி நரசிங்கானந்திற்கு ஹரித்வார் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட  இந்துமத சாமியார் யதி நரசிங்கானந்தை பெண்கள் மீது அவதூறு பரப்பிய வழக்கில் ஹரித்வார் காவல்துறை கைது செய்தது.

முன்னதாக, ஜனவரி 15ஆம் தேதி, ஹரித்வார் தர்ம சன்சத் வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட திதேந்திர தியாகியை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யதி நரசிங்கானந்தை ஹரித்வார் மகாராஜா நகர் கோட்வாலி காவல்துறையினர் கைது செய்தனர்.

சாமியார் யதி நரசிங்கானந்த் கைது – பெண்களை இழிவு செய்த வழக்கில் உத்தரகண்ட் காவல்துறை நடவடிக்கை

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

இவ்வழக்கானது, கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளது.

உத்தரப்பிரதேச காவல்துறை யதி நரசிங்கானந்திற்கு எதிராக பிரிவு 505-1(இ), 509 (பெண்ணை அவமானப்படுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (மிரட்டல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமானவற்றை வெளியிடுதல் அல்லது அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், நேற்று (பிப்பிரவரி 15), யதி நரசிங்கானந்திற்கு ஹரித்வார் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தர்ம சன்சத்: ‘அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகளை மீறும் செயல்’ – தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முன்னாள் கடற்படைத் தலைவர் கடிதம்

இது தொடர்பாக, யதி நரசிங்கானந்தின் வழக்கறிஞர் ஹர் நாராயண் குப்தா கூறுகையில், “அவர் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். ஒன்று ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு. இவ்வழக்கில் பிப்ரவரி 7ஆம் தேதி அவருக்கு பிணை வழங்கப்பட்டது. பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பிணையில் விடுதலையாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னர், யதி நரசிங்கானந்த் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை ஹரித்வார் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

Source: New Indian Express

பெண்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் யதி நரசிங்கானந்திற்கு பிணை – ஹரித்வார் நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்