Aran Sei

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்கள் :உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென பிரஸ் கவுன்சிலுக்கு மெஹ்பூபா முக்தி கடிதம்

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சுதந்திரமான உண்மைக் கண்டறியும் குழுவொன்றை அனுப்பி வைக்க வேண்டுமென, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பி.டி.பி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முக்தி பிரஸ் கவுன்சில் ஆஃப் (பிசிஐ) இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இந்தியா அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீது தாக்குதல் நிகழ்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் விரோதப்போக்கும், பாதுகாப்பற்ற நிலையும் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஆணை ஏதுமின்றியே பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத ட்வீட்களுக்கு கூட பத்திரிகையாளர்கள் வீட்டில் சோதனை, சம்மன் அனுப்புதல் மற்றும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது”. என்று அவர் எழுதியுள்ளக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, ” சி.ஐ.டி காவல்துறையால் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பின்னணி கண்காணிக்கப்படுகிறது . மூத்தப் பத்திரிகையாளர்களுக்கான தங்குமிடங்கள் மறுக்கப்படுகிறது, தொலைபேசிகள் , மடிக்கணினிகள், பாஸ்போர்ட்கள் , ஏடிஎம் கார்டுகள் முதலானவை பறிமுதல் செய்யப்படுகிறது ” என்றும் மெஹபூபா முக்தி கூறியுள்ளார்.

மேலும், காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த 23 பத்திரிகையாளர்களை மாநிலத்தைச் வெளியேற தடைவிதிக்கும் அரசின் கட்டுப்பட்டு பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் சுதந்திரமான உண்மைக் கண்டறியும் குழுவை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அனுப்ப வேண்டுமென பிரஸ் கவுன்சில் ஆஃப் (பிசிஐ) இந்தியாவுக்கு மெஹபூபா முக்தி எழுதியுள்ளக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

source:The indian express

பத்திரிக்கையாளர்கள்  மீதான தாக்குதல்கள் :உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென பிரஸ் கவுன்சிலுக்கு மெஹ்பூபா முக்தி கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்