2020 அக்டோபரில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை மனு மீது உத்தரபிரதேச அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவை செப்டம்பர் 9-ம் தேதி இறுதி தீர்ப்பதற்கு ஒத்திவைத்தது.
கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இந்து மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ சட்டம்
ஹத்ராஸ் சதி வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பனின் பிணை மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் இந்த மாத தொடக்கத்தில் நிராகரித்தது.
இதனை எதிர்த்து சித்திக் காப்பன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாகக் கூறி கைது செய்தனர்.
அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் செயல்பட்டதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த மதுரா காவல்துறை, அவர்மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்திருந்தது.
Source: newindianexpress
Jayalalitha’s death will remain a mystery – Journalist Pandiyan | Arumugasamy Commission Report Deva
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.