Aran Sei

ஹத்ராஸ் வழக்கு – பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

த்ராஸ் வழக்கில் பிணை கோரி கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

ஆகஸ்ட் 2, 2022 தேதியன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சித்திக்கப்பனின் பிணை மனுவை நிராகரித்தது. இதனை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை  தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய விசாரித்தது.

சமூகத்தைப் பிளவுபடுத்த பாஜக விரும்புகிறது – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு

டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாகக் கூறி கைது செய்தனர்.

அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் செயல்பட்டதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த மதுரா காவல்துறை, அவர்மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்திருந்தது.

அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ்கைது  செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் பிணை  மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை வரும் வெள்ளிக்கிழமை உச்ச் நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

Source: newindianexpress

BJP should be dealt in PTR Palannivel Thiagarajan style – Manoj Interview | PTR & Karan Thapar | PTR

ஹத்ராஸ் வழக்கு – பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்