Aran Sei

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: ‘இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்’ என்ற வாசகத்துடன் தானே காவல்துறை இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

பிகள் நாயகம் பற்றி பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து தானே காவல்துறை இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அதில், “இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்ற செய்தியையும் ஹேக்கர்கள் அந்த தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

“ஹலோ இந்திய அரசு, அனைவருக்கும் வணக்கம். நீங்கள் இஸ்லாமிய மதம் குறித்து மீண்டும் மீண்டும் பிரச்சினை செய்கிறீர்கள். உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களிடம் விரைந்து மன்னிப்புக் கேளுங்கள்!! எங்கள் இறைத்தூதர் அவமதிக்கப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று ஹேக்கர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்

ஹேக்கர்களிடம் இருந்து தளத்தை மீட்கும் முயற்சிகளை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். “தேவையான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். தானே சைபர் கிரைம் குழு அதைச் செய்து வருகிறது” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சில ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள அரசு, தனியார் இணையதளங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இந்தியாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : india today

Bulldozer- ஐ வெச்சே ஆட்சி நடத்தும் BJP | Yogi Adityanath | Nupur Sharma

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: ‘இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்’ என்ற வாசகத்துடன் தானே காவல்துறை இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்