Aran Sei

கியான்வாபி மசூதி: வாரணாசி நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கியான்வாபி மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி தரப்பினர் மனு தாக்கல்ல செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வாரணாசி நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று மறுத்துள்ளது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் இந்து கடவுள்களின் உருவம் இருப்பதால் வழிபட உரிமை வேண்டும் என்று 5 பெண்கள் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் குழு ஒன்றை அமைத்தது.

ஞானவாபி மசூதி: சிவலிங்கம் இருப்பதாக கூறி குளத்தை மூடுவது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் – அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியம்

மூன்று நாள் ஆய்வுப் பணிகள் நேற்று (மே 16) முடிவடைந்த நிலையில், ஆய்வின் போது மசூதி வளாகத்தில் உள்ளே இருக்கும் சிறிய நீர்த்தேக்கத்தின் (வஸூக்கானா) அருகில் சிவலிங்கம் காணப்பட்டது என்று அந்த குழு தெரிவித்துள்ளது. அதனை ஏற்ற வாரணாசி நீதிமன்றம் அங்கு யாரும் செல்ல முடியாதபடி அந்த பகுதியை சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆய்வினை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதே சமயம் இதனால் இஸ்லாமியர்களின் தொழுகை உரிமை பாதிக்கப்படக் கூடாதென்று உத்தரவிட்டுள்ளது.

ஞானவாபி மசூதியில் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க கால அவகாசம் வேண்டும் – நீதிமன்றத்தில் ஆய்வு குழு கோரிக்கை

மேலும் இந்த வழக்கின் விசாரணையை மே 19ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Source : theprint

பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview

கியான்வாபி மசூதி: வாரணாசி நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்